தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 7,707 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்த பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,110ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 94 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 52.72% குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 55 குழந்தைகளுக்கும், 49 பெண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 495ஆக அதிகரித்துள்ளது.