Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பணியில் இருந்த 96 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா: மாநில அரசு தகவல்!

மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி மும்பை மற்றும் புனே தான். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை, ஊரடங்கு விதிகளை மீறியதாக மொத்தம் 69,374 பேர் மீது ஐபிசி பிரிவு 188 இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 477 பேரை கைது செய்துள்ளனர். இருப்பினும், மக்கள் வெளியே வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் இத்துறை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |