Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்…நற்செய்தி வந்துசேரும்…!!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!!  இன்று உங்களுடைய செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டி ஊக்கப்படுத்துவது தொழில் வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மிக முக்கியமாக பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இரு முறை வாசித்து வைத்துக்கொள்வது நல்லது, அதேபோல ஆவணத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். . தேவையில்லாத விஷயத்தில் தயவுசெய்து மூக்கை நுழைக்க வேண்டாம்.கணவர் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இயங்கும். காதலர்கள் மட்டும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபடலாம். கவனத்தில் கொள்ளுங்கள் பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறு மாற்றங்கள் நிகழும் அதாவது அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |