Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சாந்தமாக செயல்படுவீர்கள்…உதவிகள் கிடைக்கும்…!

 

சிம்மம் ராசி அன்பர்களே …!!   இன்று எவரிடமும் சாந்து குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பல செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும்.இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.

உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் சிறப்பாக இருக்கும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாகவே முடியும். பணவரவு ஓரளவு கைகொடுக்கும். உடல் ஆரோக்கியம் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். ஆனால் இன்று சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்லுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

 

Categories

Tech |