கன்னி ராசி அன்பர்களே …!! புதிய முயற்சி ஓரளவு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் மந்தமாகவே இருக்கும். ஓரளவுதான் பணவரவும் கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு பாதிப்பையும் சரியாக வைக்க நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காதலர்களுக்கு இன்று வாக்குவாதங்கள் இல்லாத நாளாக அமையும். காதலில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கு.
இன்று உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உள்ளமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டிலும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்..