இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய எரின் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பல வருடங்கள் குழந்தையின்றி தவித்து இனி எப்போதும் குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட பின்னர் அதிசயமாக பிறந்த குழந்தைதான் எரின். ஆறு மாத காலத்திற்குள் அளவுகடந்த பிரச்சனைகளை சந்தித்து அதனை விட்டு மீண்டு வந்த நிலையில் கொரோனாவையும் அவள் வென்று விடுவாள் என அவளது பெற்றோர் உறுதியாக நம்பினார்கள்.
லிவர்பூலில் இருக்கும் சிறுவர் மருத்துவமனையில் மூக்கிலும் வாயிலும் செயற்கை சுவாசக் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் படுத்து இருக்கும் குழந்தையின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று முன்தினம் மருத்துவர்கள் எரின் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து விட்டதாக கூறி அவளது பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.
எரின் தந்தை “தனது மகள் கொரோனாவை வென்றுவிட்டால், அதிக அளவு துன்பப்படுத்தி இருந்தாலும் அவள் குணமடைந்து விட்டால். இதனை வைத்து ஏற்கனவே எந்த அளவுக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் கூட கொரோனா தாக்கினால் அவர்களுக்கு மரணமே தண்டனையாக அமையாது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது எரின் புன்னகைக்க தொடங்கி தானே பேசிக் கொள்கிறார்களாம். மருத்துவமனையில் குழந்தையுடன் ஒருவருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற காரணத்தினால் குழந்தையின் தாய் மட்டுமே அவளுடன் இருக்க தந்தையால் எரினை சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று எரினின் தந்தை அவளை சென்று பார்த்துள்ளார்.
குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே கொண்டு வரும் பொழுது செவிலியர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இன்னும் ஆக்சிஜன் தேவைப்படும் என்றாலும் குறைந்த அளவு ஆக்சிஜன் செலுத்தினால் போதுமானது. எனவே அவள் இன்னும் சிறிது காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனவும் அக்டோபரில் அவளது பிறந்த நாளுக்கு முன் அவள் வீடு திரும்பி விடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.