Categories
உலக செய்திகள்

கடைகளை திறக்கலாம்…! ”புது ஆயுதத்தை கையிலெடுத்த” அமெரிக்கா – கொரோனா காலி …!!

அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது  

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் சிலவற்றை பார்வையிட்டார் டிரம்ப். அது கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தயார்செய்யப்பட்ட கருவிகள்.

அந்த கருவிகளில் ஒரு வெண்டிலேட்டர், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் தூய்மைப்படுத்த கூடிய கருவி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஆக்சிஜன் ஹூட் போன்றவை அடங்கும். அவற்றுடன் கிருமி நீக்கம் செய்து அறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் அம்புஸாட் கருவியும் இடம்பெற்றிருந்தது. இந்த கருவியை முதலில் சிறைச்சாலைகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் பயன்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி மூலம் மிகவும் எளிதாக கிருமிகளை நீக்கி விடலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

கிருமி நீக்கம் செய்ய வேண்டிய அறையினுள்ளே இந்த கருவியை வைத்தால் அதில் இருந்து வரும் பனிமூட்டம் போன்ற புகை அறையில் இருக்கும் கிருமிகள் அனைத்தையும் கொன்றுவிடும். கருவியின் செயல்பாடு முடிந்ததும் அறையை மீண்டும் துடைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கருவியை வைத்து நாங்கள் முழு அறைகளையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த விரும்புகிறோம். இதன்மூலம் பள்ளிகள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்கப்பட லாம் என பிரிடென்ஸ்டைன் கூறினார் என்று ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |