இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்த மலையளவு சாதனையை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட தளபதி விஜய் தனது பழைய பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் தளபதி விஜய் “பாக்யராஜ் சாரின் இன்று போய் நாளை வா திரைப்படம் தான் எனக்கு ஃபேவரட். அந்த படத்தை எப்போது போட்டாலும் பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.