Categories
உலக செய்திகள்

கலக்கும் சுந்தர் பிச்சை….! ”ரூ. 2,000,00,00,000 சம்பளம்” உலகளவில் ஆச்சரியம் ….!!

சுந்தர் பிச்சை 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்காவில் உள்ள கூகுள், ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுபவர் சுந்தர் பிச்சை. 47 வயதான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 280 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 2,136 கோடி) சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள் ஊதியம் தொடர்பான பட்டியலை அமெரிக்க அரசுக்கு தாக்கல் செய்வார்கள்.

How Google CEO's brilliant answer in a job interview helped him ...

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டிற்கான சம்பளம் குறித்த விவரங்களை ஆல்பாபெட் நிறுவனம் தாக்கல் செய்ததில் சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல் வெளியாகியதில் சுந்தர்பிச்சை சம்பளம் தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டபோது அவருக்கு அடிப்படை சம்பளமாக 6,50,000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் 2019 இறுதியில் அவர் ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்தால் அடிப்படை ஊதியம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

Sundar Pichai

மேலும் சுந்தர்பிச்சைக்கு ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளும் கொடுக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பை சேர்த்து தான் ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் சுந்தர்பிச்சைக்கு வழங்கியுள்ளது. உலகளவில் உள்ள அதிக நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர்களின் ஊதியம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் 280 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது உலகளவில் வாழும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |