உலக அளவில் கொரோனாவில் மரணம் அடைவதில் நான்கில் ஒருவர் அமெரிக்கராக இருப்பதும் அமெரிக்காவின் பரிதாப நிலையை உணர்த்துகிறது.
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வல்லரசு நாடாக காட்சியளித்த அமெரிக்காவின் நிலை தற்போது பரிதாபம் ஆகிவிட்டது. இந்த அளவுக்கு கொரோனா அமெரிக்காவை கொண்டுவந்து விட்டிருப்பது மிகப்பெரிய துயரம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் இந்த தொற்றினால் 9 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து துருக்கி போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கின்றது.
உயிரிழப்பவர்களில் நான்கில் ஒருவர் அமெரிக்கர் என்பது அந்நாட்டிற்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் மரண ஓலம் தான் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் குவிந்துகிடக்கும் சடலங்கள் இறுதி சடங்கிற்காக எடுத்துச்செல்லப்படும் அவல நிலை. இதுவரை எந்த நாட்டிலும் நடக்காத ஒன்றாகவே அமைந்துள்ளது. இதில் உலகின் நிதி தலைநகரம் என்ற சிறப்பு வாய்ந்த நியூயார்க் நகரம் கொரோனா தொற்று மையமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.