Categories
உலக செய்திகள்

கொரோனா குறைகிறது….! ”இதைப்பார்க்க அற்புதமா இருக்கு” டிரம்ப் மகிழ்ச்சி …!!

அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறைவதை தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்

உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்து விட்டது. அதிலும் உலகின் நிதி தலைநகரம் என்ற சிறப்பு மிக்க நியூயார்க் நகரம் தற்போது தொற்று மையமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரம் நியூயார்க்கில் சோதனை செய்யப்பட்டவர்களில் 38 சதவீதம் பேருக்கு ஒரு தொற்று உறுதியானது.

இந்த வாரம் 28 சதவீதமாக உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதுபோன்று கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் 50 சதவீதம் குறைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. லூதியானாவில் கடந்த வாரம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 25% தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 15 சதவீதமாக குறைந்துள்ளது.

18 மாகாணங்களில் இந்த வாரம் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது குறிப்பிடக்கூடிய முன்னேற்றமாகும். இதன் காரணமாக இப்போது அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கும் மாகாணங்களில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் வாழ்ந்துவருகின்றனர்.அணைத்து அமெரிக்கர்களும் சுகாதாரத்துடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டும். நமது நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குகிறோம். இது மிகவும் ”அற்புதமாக இருக்கின்றது” எனக் கூறினார். இதனிடையே அமெரிக்க பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வசதியாக இந்திய ரூபாய் கணக்கில் 24 லட்சம் கோடி வழங்க வகை செய்வதற்கு மசோதாவில் கையெழுத்துப் போட்டுள்ளார் அதிபர்  டிரம்ப்.

Categories

Tech |