இன்றைய நாள் : ஏப்ரல் 28
நெட்டாண்டு : 119ஆவது நாள்
ஆண்டு முடிவிற்கு : 247 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார்.
1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.
1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது.
1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட ஏழாவது மாநிலமானது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1796 – பிரெஞ்சு எல்லையை நடுநிலக் கரையோரப் பகுதி வரை விஸ்தரிக்க முதலாம் நெப்போலியனுக்கும், சாந்தீனிய இராச்சியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1949 – பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் மானுவல் குவிசோனின் மனைவி அவுரோரா குவிசோனும், அவரது மகள், மற்றும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 – சப்பானுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் தாய்பெய் நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாம் சீன-சப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட சப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1967 – வியட்நாம் போர்: முகம்மது அலி ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையில் சேர மறுத்ததை அடுத்து, அவரது குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.
1969 – சார்லஸ் டி கோல் பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1970 – வியட்நாம் போர்: கம்போடியாவில் அமெரிக்கப் படைகள் கம்யூனிச சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1975 – வட வியட்நாம் இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிய போது, தெற்கு வியட்நாமின் இராணுவத் தலைவர் காவோ வான் வியென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
1978 – ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து சுவீடனில் உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட கதிர்வீச்சு பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது.
1988 – அவாயில், அலோகா ஏர்லைன்சின் போயிங் 737 வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.
1995 – பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் “மார்ட்டின் பிறையன்ட்” என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிறப்புகள்:
1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1831)
1774 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844)
1854 – ஹெர்த்தா அயர்டன், போலந்து-பிரித்தானியப் பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1923)
1900 – ஜான் ஊர்த், டச்சு வானியலாளர் (இ. 1992)
1906 – கியேடல், செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978)
1906 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983)
1908 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974)
1923 – இரா. செழியன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்
1924 – கென்னத் கவுண்டா, சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர்
1926 – ஹார்ப்பர் லீ, அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
1926 – எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016)
1937 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (இ. 2006)
1948 – டெர்ரி பிராச்செத், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2015)
1981 – ஜெசிகா ஆல்பா, அமெரிக்க நடிகை
1987 – சமந்தா ருத் பிரபு, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்:
1854 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (பி. 1786)
1918 – காவ்ரீலோ பிரின்சிப், யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894]])
1942 – உ. வே. சாமிநாதையர், தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855)
1945 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883)
1955 – தி. வே. சுந்தரம், இந்தியத் தொழிலதிபர் (பி. 1877)
2000 – சாலினி இளந்திரையன், தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி. 1933)
2005 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959)
2006 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
2007 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912)
சிறப்பு நாள்:
தொழிலாளர் நினைவு நாள்.