சாவித்திரியின் வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் கின்னஸ் சாதனை படைத்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகை, நடிப்பில் வல்லமை வாய்ந்தவர், என நடிகை சாவித்திரியை சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், கீர்த்தி சுரேஷ் அவரின் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட நடிப்பால் பலரின் மனதையும் கவர்ந்தார். இதனால் அவருக்கு திரும்பிய பக்கமெல்லாம் பாராட்டுக்கள் குவிந்தது.
அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் பயோபிக்கில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
விஜய நிர்மலா யார் என்று தெரியுமா.? அவர் பல மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி உலகிலேயே 42 படங்களையும் இயக்கி வெற்றிகண்ட ஒரே பெண் இயக்குனரும் ஆவார். அவர் கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். அதனால் இது சம்மந்தமாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறதாம்.