இன்றைய நாள் : ஏப்ரல் 27
கிரிகோரியன் ஆண்டு : 117 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 118ஆவது நாள்
ஆண்டு முடிவிற்கு : 248 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார்.
629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார்.
711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர்.
1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டன.
1521 – நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு-வெனீசியப் படையினரை எசுப்பானிய-திருத்தந்தைப் படையினர் தோற்கடித்தனர்.
1565 – பிலிப்பீன்சின் முதலாவது எசுப்பானியக் குடியேற்றம் செபு அமைக்கப்பட்டது.
1667 – பார்வையற்ற ஜான் மில்டன் தான் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1805 – அமெரிக்கப் படையினரும், பேர்பர்களும் திரிப்பொலியின் தெர்னா நகரைத் தாக்கினர்.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கைக் கைப்பற்றின.
1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்தானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
1906 – உருசியப் பேரரசின் சட்டமன்றம் (தூமா) முதல் தடவையாகக் கூடியது.
1909 – உதுமானியப் பேரரசின் சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெகுமெது ஆட்சிக்கு வந்தான்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சுலோவீனியாவின் கம்யூனிஸ்டுகள், ஏனைய சோசலிசவாதிகளுடன் இணைந்து சுலோவீனிய நாட்டின் விடுதலை முன்னணியை அமைத்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏதென்சு நகரை ஊடுருவின.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினி செருமனியப் போர்வீரன் என்ற போர்வையில் வெளியேற முயன்றபோது இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1959 – மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 – பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961 – சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. மில்ட்டன் மார்காய் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
1967 – கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸ்போ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974 – அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாசிங்டனில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978 – இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981 – பராக் முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது.
1986 – செர்னோபில் அணு உலை விபத்து காரணமாக உக்ரைனின் பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1992 – செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவை உள்ளடக்கிய யுகொசுலாவியக் கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1992 – உருசியா மற்றும் 12 முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.
1993 – காபோனில் லிப்ரவில் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் சாம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2001 – தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2005 – ஏர்பஸ் ஏ380 வானூர்தி தனது முதலாவது சோதனைப் பறப்பை மேற்கொண்டது.
2007 – எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செஞ்சேனை நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
2011 – ஐக்கிய அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, ஜோர்ஜியா, டென்னிசி மாநிலங்களில் 205 சுழல் காற்றுகள் தரைதட்டியதில் முன்னூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2018 – 65 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரியாவுக்குள் அடியெடுத்து வைத்த முதல் வடகொரியத் தலைவர் என்ற பெருமையை கிம் ஜொங்-உன் பெற்றார். கொரியப் பிணக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிறப்புகள்:
1593 – மும்தாசு மகால், முகலாயப் பேரரசி (இ. 1631)
1723 – பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறித்தவத் தமிழறிஞர் (இ. 1790)
1737 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (இ. 1794)
1759 – மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1797)
1791 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், மோர்சு தந்திக்குறிப்பை கண்டுபிடித்தவர் (இ. 1872)
1820 – எர்பெர்ட் இஸ்பென்சர், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1903)
1822 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (இ. 1885)
1852 – பிட்டி தியாகராயர், தமிழக அரசியல் தலைவர் (இ. 1925)
1878 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா, மெக்சிக்கோ கத்தோலிக்கப் புனிதர் (இ. 1963)
1902 – கந்த முருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)
1912 – சோரா சேகல், இந்திய நடிகை, நடனக் கலைஞர் (இ. 2014)
1914 – எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை, இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 2000)
1939 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (இ. 2009)
1941 – அலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர்
1941 – பத்ஹுல்லா குலன், துருக்கிய இறையியலாளர்
1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1945 – பிரபஞ்சன், தமிழக எழுத்தாளர், விமர்சகர் (இ. 2018)
1955 – எரிக் ஷ்மிட், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1962 – எட்வர்டு மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்
1967 – வில்லியம்-அலெக்சாந்தர், நெதர்லாந்து மன்னர்
1969 – கோரி புக்கர், ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல்வாதி
1995 – நிக் கீர்யோசு, Australian tennis player
இறப்புகள்:
1521 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480)
1605 – பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1535)
1882 – ரால்ப் வால்டோ எமேர்சன், அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1803)
1883 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1820)
1886 – என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1838)
1937 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய சமூகவியலாளர், மொழியியலாளர், அரசியல்வாதி (பி. 1891)
1944 – கு. ப. ராஜகோபாலன், தமிழக எழுத்தாளர் (பி. 1902)
1995 – ஆட்டோ சங்கர், தமிழகக் கொலைக்குற்றவாளி (பி. 1954)
1962 – ஏ. கே. பசுலுல் ஹக், பாக்கித்தான் அரசியல்வாதி (பி. 1873)
1969 – என். ஆர். தியாகராஜன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1913)
1972 – குவாமே நிக்ரூமா, கானாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1909)
1974 – ஸ்ரீரஞ்சனி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
1984 – எம். டி. இராமநாதன், கேரளக் கருநாடக இசைப்பாடகர் (பி. 1923)
2009 – பெரோஸ் கான், இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் (பி. 1939)
2015 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
2017 – வினோத் கண்ணா, இந்திய நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (பி. 1946)
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (தென்னாப்பிரிக்கா)
விடுதலை நாள் (சியேரா லியோனி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1961)
விடுதலை நாள் (டோகோ, பிரான்சிடம் இருந்து 1960)