கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து களப்பணியாளர் சத்து மாத்திரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் தன்னலம் கருதாது பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் களத்தில் நின்று சுகாதார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் அரசால் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் இவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அனைத்து துறை பணியாளர்களுக்கும் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் சிங்க் மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகளைக் நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு கொரோனா பயத்தை ஒழித்து, அதற்க்கு எதிரான போரை இன்னும் வீரியமாக நடத்த முடியும் என பலரும் பாராட்டியுள்ளனர்.