Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் டோனியை ஓட வைத்த ரசிகர்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடினார்.

கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது டோனியை தொட முயன்ற போது ஓட்டம் பிடித்து ஆட்டம் காட்டினார் இறுதியில் அவர் ஆசையை நிறைவேற்றினார். இந்நிலையில்  இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

 

இதற்காக சென்னை அணியின் கேப்டன் டோனி தலைமையில்  சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி  பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது டோனி மைதானத்திற்குள் பயிற்சியில் ஈடுபட மைதானத்தில் நுழையும் போது ரசிகர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அப்போது  மைதானத்தில் ஓடிவந்த ரசிகர் ஒருவர் டோனியை தொட முயன்ற போது அவரை தொட விடாமல்  டோனி அவருடன் ஓடிப்பிடித்து விளையாடினார்.

 

Categories

Tech |