27-04-2020, சித்திரை 14, திங்கட்கிழமை
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00
நாளைய ராசிப்பலன் – 27.04.2020
மேஷம்
இன்று ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
குடும்பத்தில் இன்று மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். கடன் ஒரளவு குறையும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டு.
மிதுனம்
குடும்பத்தில் இன்று பொருளாதாரத்தின் நிலை சிறப்பாக இருப்பதால், தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள்கள் சேரும். தொழிலில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்கள் வேலைகளில் புது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் குறையும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.
சிம்மம்
இன்று அதிகாலையிலேயே மனமகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வீடு வந்து சேரும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் சிறப்பாக இருப்பதால், வருமானம் இரட்டிப்பாகும். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்புகள் ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இன்று ஒரு சில பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. இன்று மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று தொலைதூரப் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும், பொறுமையுடனும் செயல்படுவது நல்லது. விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
தனுசு
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சூர்யா பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.
மகரம்
உங்களுக்கு இன்று திடீர் பணவரவு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும். நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் வெளியாக நற்செய்திகள் வந்து சேரும். தொழில் தொடர்பாக இருந்த நெருக்கடிகள் மறைந்து மன நிம்மதி ஏற்படும்.
கும்பம்
இங்கு குடும்பத்தில் பெரியவர்கள் உடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அரசுத் துறையில் ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொலைதூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டு. பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
மீனம்
உடல் ஆரோக்கியம் இன்று சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனநிம்மதியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.