மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே. குமரவேல் விலகுவதாக அறிவித்தார்.
வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்பமனு விநியோகம் செய்து நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் வருகின்ற 24_ஆம் தேதி கோவையில் இருக்கும் கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கின்றது. ஆனால் அதற்க்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக கடலூர் தொகுதியில் சி.கே. குமரவேல் போட்டியிடுவதாக அவரே அறிவித்ததாக தெரிகின்றது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராகவும் , மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த சி.கே. குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் . இவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கட்சி தலைமை வேட்பாளர்கள் நேர்காணல் முடிவதற்கு முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதனால் மக்கள் நீதி மைய்யத்தில் புகைச்சல் இருப்பது தெரியவந்துள்ளது .இதை கமல் எப்படி எதிர்கொள்வர் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.