Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… திடீர் செலவுகள் ஏற்படும்…பொறுமை அவசியம்…!

 

மேஷம் ராசி அன்பர்களே …!  இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலைகள் சற்று வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

திடீர் செலவுகள் இன்று ஏற்படும். உறவினர்கள் இன்று உதவிகரமாக இருப்பார்கள். ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை பொறுமையை கடைபிடியுங்கள். அதுபோலவே காதலர்கள் இன்று எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொறுமையைக் கையாண்டு வெற்றி உண்டாகும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கும் அதுமட்டுமில்லாமல், இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |