Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…காரிய தடை நீங்கும்…அவமானம் வந்து நீங்கும்…!

 

மிதுனம் ராசி அன்பர்களே …!   இன்று குடும்பத்தாருடன் இணக்கமாக சூழ்நிலை உருவாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் உருவாக்கும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள் ஆக இருக்கும். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்யாதீர்கள். மற்றவர் பிரச்சனைகளில் தயவு செய்து மூக்கை நுழைக்காதீர்கள்.

காரியங்களை ஏற்பட்ட தடை ஓரளவு நீங்கும். திருப்தியான, சாதுரியமான பேச்சின் மூலமும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய பிரச்சினைகளும் தீரும்.  இன்று சரியாக பணவரவை பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதைப்பற்றியும் தயவுசெய்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள் காலங்கள் கடந்து வரும்போது அனைத்து விஷயமும் கைகூடிவரும்.

காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக தான் இருக்கின்றது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்க சரியான உணவு வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்போதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |