யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு ரேட்டிங் குறைந்த ரஜினியின் தர்பார் படம் அதிர்ச்சி அளித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் நடிகராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளம் நடிகர்களான அஜித் மற்றும் விஜயின் வளர்ச்சி ரஜினியின் நம்பர் 1 இடத்தை கதிகலங்க வைத்திருக்கிறது. அதிலும் முக்கியமாக இளையதளபதி, ரஜினிக்கு எல்லா பகுதிகளிலும் ஒரு சிறப்பு வாய்ந்த போட்டியாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனுடைய டி.ஆர்.பி அதிகமான நிலையில் இருந்தாலும், மொத்த ரேட்டிங்கில் 7வது இடத்தில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த சீமராஜா படம் தர்பார் படத்திற்கு இணையாக இருப்பது மேலும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தர்பார் ரேட்டிங் அனைவர்க்கும் அதிர்ச்சியான ஒன்று தான்.