துலாம் ராசி அன்பர்களே …! இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்டு கூடும். உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். மொத்தத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் மனஅழுத்தம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபத்தை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது .
பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். இன்று செலவைக் கட்டுப்படுத்தி வையுங்கள் கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். அது போலவே விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் இருக்கட்டும். பயணங்கள் செல்வதாக இருந்தால் அதாவது இப்ப இருக்கக் கூடிய சூழ்நிலையில் மிக முக்கியமான பயணிகள் செல்வதாக இருந்தால் கவனத்தில் கொள்ளுங்கள்.அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள் உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடவேண்டாம். புதிய உதவிகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஓரளவு சீராக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்