Categories
உலக செய்திகள்

சீனாவை பொளந்து கட்டிய இந்திய பெண்…. இப்படி புட்டு புட்டுன்னு வச்சுட்டீங்களே …!!

சீன அரசுக்கு எதிராக இந்திய பெண் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்

உலகம் முழுவதும் கொரோனா பற்றிப் பரவி அமெரிக்க அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் வூஹானிலிருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து கொரோனா பரவியதாகவும், மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்ல வில்லை எனவும் அமெரிக்கா சீனா மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில், இந்தியாவில் பிறந்த அமெரிக்க தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐநா சபையின் அமெரிக்க தூதராகவும் இருக்கும் இந்திய பெண் நிக்கி ஹாலி சீனாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கி சீனாவின் தவறு குறித்து புட்டு புட்டு வைத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான கோரிக்கை மனுவாகவும் இந்த கையெழுத்து இயக்கம் அமையப்பெற்றுள்ளது. இந்திய பெண் நிக்கி ஹாலி தொடங்கிய கையெழுத்து இயக்க மனுவில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்று பரவலில் சீன கம்யூனிஸ்டு அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. இதற்கு அவர்களை பொறுப்பேற்க வைத்தாக வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க நாடாளுமன்றம் எடுக்க வேண்டும். அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

சீன அரசின் மோசடியை தடுத்து நிறுத்த எங்கள் மனுவில் கையெழுத்து இடுங்கள்” என கூறப்பட்டிருந்ததோடு வைரஸ் பரவத் தொடங்கியதை சீனா மறைத்ததா என்பது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றம் உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்களுக்காக சீனாவை சார்ந்து இருப்பதை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சீனாவை தனது நியாயமான பங்களிப்பை ஐநா சபைக்கு செய்ய வைக்க வேண்டும்.

சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை ஆதரிக்க வேண்டும். சீனாவின் நிதி அளிப்பு பற்றிய தகவல்கள் முழுவதும் அமெரிக்க கல்லூரிகளையும் வெளியிட வைக்கவேண்டும் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அதில் சீனாவிற்கு இருக்கும் தொடர்பு குறித்தும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதம் மேற்கொள்ளவேண்டும்” என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது

Categories

Tech |