கும்பம் ராசி அன்பர்களே …! இன்று நீங்கள் சுறுசுறுப்பு அடையக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும். தோற்றப்பொலிவு கூடும், வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை மதிக்க வேண்டும். தொழில் ரீதியாக சில விஷயங்கள் உங்களுக்கு பரிமாறப்படும் புத்துணர்ச்சி பெருகும் நாள்.
இன்றைய நாள் இருக்கும் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிச்சலுடன் ஈடுபட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். இடமாற்றம் வெளியூர் பயணங்கள் அலைச்சல் ஆகியவை அதிகமாக தான் இருக்கும். இருக்கக் கூடிய சூழ்நிலையில் வெளியூர் பயணங்களை மட்டும் தயவு செய்து தவிர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்வாகனத்தில் செல்லும் பொழுதும் மித வேகத்தை பயன்படுத்துங்கள்..
அதையும் மீறி வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாகத்தான் செய்ய வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவின் மீதும் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை