திமுக சார்பில் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்குதிவானது ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , ஐஜேகே ,கொங்.தே.ம.க மற்றும் இயூமுலீ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.
நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுகவும் , 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவதாக தொகுதி ஒப்பந்தம் செய்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள் . அதே போல 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி ஆதரவோடு திமுக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது . இந்நிலையில் திமுக சார்பில் 2019 – சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .