தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960ல் இருந்து 1,020 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.