தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,020ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் – 2, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது