Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 7,495 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 523ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது

Categories

Tech |