Categories
உலக செய்திகள்

கிம் மரணம் ? என்ன நடக்கும் ? எப்படி அறிவிப்பார்கள் ? பரபரப்பு தகவல்கள் …!!

வட கொரியாவின் தலைவர் கிம் இறந்தால் எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது

வடகொரியாவின் அதிபர் மரணம் அடைந்தால் அதனை அந்த நாடு எப்படி அறிவிக்கும் என்று அவர் தந்தையின் மரணத்தில் இருந்து சில தகவல் மூலம் அறிய முடிகின்றது. உலகில் இருக்கும் பல நாடுகளை தனது அணு ஆயுத சோதனை மூலம் கடுமையாக மிரட்டி வந்தவர் கிம். கொரோனா தொற்றினால் உலக நாடுகள் நடுங்கி கொண்டிருந்த வேளையில் தனது நாட்டில் அணு ஆயுத சோதனை நடத்தி வந்தார். இதன் காரணமாக அமெரிக்காவின் கண் வடகொரியா மீது திரும்பியது.

இப்படி சர்வ சாதாரணமாக இருந்து வந்த வட கொரிய அதிபர் கிம் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்து வந்தது. ஆனால் ஹாங்காங் தொலைக்காட்சி இயக்குனர் கிம் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் கிம் சில தினங்களாக வெளியில் யார் கண்ணுக்கும் தென்படவில்லை. உலகில் ரகசியமான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பதனால் நாட்டின் தலைவர் நிலை தற்போது மர்மமாக இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் நாட்டின் தலைவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு கிம் இறந்திருந்தால் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஏனென்றால் கடைசியாக வட கொரியாவின் தலைவர் (கிம்மின் தந்தை) மரணமடைந்ததை 48 மணி நேரங்களுக்கு பின்புதான் அரசு ஊடகங்கள் அறிவித்தது.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 17 உயிரிழந்த கிம் தந்தை மரணம் பற்றிய தகவல் டிசம்பர் 19 ஆம் தேதி அன்று தான் வெளிவந்தது. நாட்டின் தலைநகரான பியோங்கியங்க்கு வெளியே ஒரு பகுதிக்கு ரயிலில் பயணித்த போது அவர் மாரடைப்பால் இறந்ததாக தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கிம் தந்தையின் இறுதிச்சடங்கு இறந்து 9 நாட்களுக்கு பின்னர் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது.

வட கொரியாவின் தலைவர் இறந்துவிட்டால் நாட்டு மக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து நிற்பார்கள் இதன் மூலமும் நாம் கிம் மரணம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இதன் அர்த்தம் இறுதி சடங்கு மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்படலாம். தந்தை மரணம் அடைந்ததை தொடர்ந்து கிம் ஆட்சிப் பொறுப்பை  ஏற்றார். ஒருவேளை கிம்  இறந்தது உறுதி செய்யப்பட்டால் கிம்மின் சகோதரி வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் அவர் சகோதரரை விட இரக்கமற்றவர். அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து நிபுணர்கள் இப்போதே எச்சரித்து வருகின்றனர். கிம்மின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொரிய மக்கள் ராணுவத்தை மேற்பார்வையிடும் பணியகத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |