வூஹான் நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது சீனாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று முதன்முதலில் பரவ தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் தான். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அந்நகரில் மேற்கொண்ட கடினமான தடுப்பு நடவடிக்கைகளால் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.
சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடங்கிய வூஹான் நகரம் இன்று கொரோனா இல்லாத நகரம் ஆகியுள்ளது. புதிதாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் இல்லை. கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வூஹானில் மட்டும் 50,333 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்தனர். கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து வூஹான் நகர் முழுவதும் முடக்கப்பட்டது. பின்னர் 76 நாட்களுக்குப் பிறகு கடந்த 8 ஆம் தேதி முழு ஊரடங்கு வூஹான் நகரில் விலக்கப்பட்டது.