பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்துவதற்கான விதிமுறைகள் குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் 12ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
முக கவசம் தேவையை நிவர்த்தி செய்ய மே 4 ஆம் தேதி துணிக்கடைகள் திறப்பதற்கு அனுமதியுண்டு. அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து மற்ற கடைகளை திறந்து கொள்ளலாம். மேலும் மே 18 முதல் பள்ளிகள் தொடங்கலாம். ஆனால் வகுப்பறையில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது. உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்கு பின்னர் திறக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6679 பேர் மரணமடைந்துள்ளனர்.