எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றார்கள் என்று லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் நாடாளுமன்ற தேத்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் திமுக மற்றும் அதிமுக_விற்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிப்பேன் . சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்துவோம் . சட்டமன்ற தேர்தலே பிரதானம் , நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்று அடுக்கு மொழிகளில் வசனங்களை பேசினார். இவரின் பேச்சை குறளரசன் என்ற போலியான பெயரிலான சமூக வலைதளத்தில் T.ராஜேந்திரன் தமிழகத்தில் தனித்து போட்டியிடுவார் , வெற்றி பெறுவார் என்று வதந்தி பரப்பியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த T.ராஜேந்திரன் கூறுகையில் , திமுக மற்றும் அதிமுக_விற்கு மாற்றாக மூன்றாவதாக ஒரு மாற்று அணியை நான் உருவாக்குவதற்கு முயற்சி செய்வேன் என்றும் , வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்று தான் கூறினேன் .ஆனால் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எங்கள் அப்பா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று என்னுடைய மகன் குறளரசனின் பெயரிலான போலி சமூக வலைதளத்தில் தவறான செய்தியை போடுகிறார்கள் .
அரசியலில் வேண்டுமென்றே எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றனர் . நான் அந்த பேக் ஐடியை கொண்டு பதிவிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போகிறேன் . காவல்துறையில் புகார் செய்வது மட்டுமல்லாமல் சைபர் கிரைமிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் . நான் , எனது மகன் குறளரசன் சோசியல் மீடியா , பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கிடையாது என்று T.ராஜேந்திரன் பேட்டியளித்தார்.