Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவரின் ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி, புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் யாருக்கும் கொரோனா இல்லாதிருந்த நிலையில், தருமபுரி மற்றும் புதுக்கோட்டையில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரை கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |