தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் காசிமேடு பகுதியை சோந்த ஒரே குடும்பத்தைச் சோந்த 7 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 523ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை குறித்து சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், திருவொற்றியூா் 14, மணலி 1, மாதவரம் 3, தண்டையாா்பேட்டை 65, ராயபுரம் 145, திரு.வி.க. நகா் 85, அம்பத்தூா் 2, அண்ணா நகா் 45, தேனாம்பேட்டை 55, கோடம்பாக்கம் 54, வளசரவாக்கம் 17, ஆலந்தூா் 9, அடையாறு 17, பெருங்குடி 8, சோழிங்கநல்லூா் 2, பிற மாவட்டத்தைச் சோந்தவா் ஒருவருக்கு என மொத்தம் 523 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஏப்ரல் 6ம் தேதி 100-யைக் கடந்தது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் 523 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.