காஞ்சிபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ், சேகர். இவர்கள் இருவரும் தங்களது வயிற்று பிழைப்பிற்காக 40 ஆடுகளை பேணி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் பூட்டி அடைத்துவிடுவார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கம்பி அறுந்து ஆடுகளின் மேல் விழுந்து 40 ஆடுகளும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்,
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காலகட்டத்தில் நாற்பது ஆடுகளும் இறந்து போனதால் அவரவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிந்தராஜ் மற்றும் சேகர் ஆகியோர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.