Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ்க்கு திருமணம்.? திடீர் திருப்பத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை நிஹாரிகாவிற்கும் திருமணம் என்று பரவிய வதந்திகள் பற்றி விளக்குகிறார் நிஹாரிகா.

பிரபாஸ் – அனுஷ்கா காதல்:

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் நடித்து  பிரபலமானவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதேபோல் அருந்ததி, ருத்ரமாதேவி  என பிரமாண்ட படத்தில் நடித்து அசத்தியவர் தான் அனுஷ்கா. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும், திருமணம் விரைவில் செய்து கொள்ள போவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. இவ்வாறான செய்திகளை இரண்டு பேருமே மறுத்தனர். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம் என்றும் தெளிவாக தெரிவித்தனர்.

பிரபாஸ் திருமணம், திடீர் திருப்பம்: 

இப்பொழுது இருக்கக்கூடிய இந்த கொரோனா ஊரடங்கின் சூழலில் பிரபாஸின் திருமணம்  குறித்து மற்றும் ஒரு செய்தி பரவி உள்ளது. இந்த செய்தியாவது திருமணத்தில் கொண்டு சேர்க்குமா.? வாருங்கள் பார்ப்போம்… அதாவது பிரபல தெலுங்கு முன்னணி ஸ்டார் நடிகர் சீரஞ்சீவியின் உடன்பிறந்த சகோதரரின் மகள் நிஹாரிகா ஆவார். இவர் தமிழில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக்குடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்னும் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கும் பிரபாஸ்க்கும் திருமணம் என்று கூறப்பட்டு வருகிறது.

நடிகை நிஹாரிகாவின் பதில்;

நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்வதாக பரவும் செய்தி உண்மையல்ல. முற்றிலும்  இது ஒரு பொய்யான செய்தி ஆகும்.  இந்த மாதிரியான பொய்யான தகவலை பரப்பி விடுவது யார்.? என்று எனக்கு தெரியவில்லை. இம்மாதிரியாக பரவும் வதந்திகள் எதுவாக இருந்தாலும் மக்கள் உடனே நம்பிவிடுவது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் சில நடிகர்களுடன் கிசுகிசு; 

இது மட்டுமல்லாமல் பிரபாஸோடு நின்று விடாமல் இவர் ஏற்கனவே நாகசவுரியா, சாய் தரம் தேஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோருடன் சேர்த்து இவர் கிசுகிசுக்கப்பட்டார்.

 

Categories

Tech |