Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகளை நேற்று பார்வையிட்டனர்.

படுக்கை வசதிகள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, அவர்களுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அம்மா உணவகம், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். நடமாடும் காய்கறி அங்காடிகள், வெளிமாநில லாரிகள் வருகை குறித்தும் அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்தியகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. இந்த ஆய்வு நிறைவடைந்த பின்னர் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் இந்த குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

Categories

Tech |