ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 26 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 800க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். அதில் ஆந்திர மாநிலத்தில் 1061 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ஒருவர் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட அவரிடமிருந்து 24 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது தெரியவந்ததாக விஜயவாடா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அதே மாவட்டத்தில் மற்றொரு லாரி ஓட்டுநர் மூலம் 15 பேருக்கு தொற்று பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அலட்சியத்தால் ஒரே பகுதியில் 40 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து விஜயவாடா மாவட்ட ஆட்சியர் தனிமனித இடைவெளியை சரியாக கடைபிடிக்காத இவ்வாறு தோற்று பரவுவதற்கு காரணமாக அமைகிறது இவர்களது அலட்சியத்தால் விஜயவாடாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்