Categories
உலக செய்திகள்

சாப்பாட்டால் சரிந்த கிம் ஜாங்…!! வெளியான அதிர்ச்சி தகவல் …!!

வடகொரியா தலைவர் கிம் எடுத்து கொண்ட உணவுமுறையே அவரது உடல்நிலையை பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு பிரியரான வடகொரியா தலைவர் கிம் விலை அதிகமுள்ள சீஸ், மாட்டுக்கறி மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். 35 வயதில் 127 கிலோ எடையுடன் இருப்பது தான் அவர் தீவிர சிகிச்சை பெறுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார்.  2015ஆம் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 175 பவுண்டுகள் மதிப்பில் இரண்டு பாட்டில் மதுவை குடிப்பதாகவும். உணவில் கோப் ஸ்டீக்  எம்மெண்டால் சீஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாகவும் சமையல் கலைஞர் பியூஜிமோட்டோ தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் பெரும்பாலான மக்கள் ஒரு வேளை உணவுக்கே துன்பப்படும் நிலையில் கிம் ஜாங் விருந்து போல் உணவு உண்பது சர்வதேச பத்திரிக்கைகளில் விமர்சனம் செய்யப்பட்டது. இருந்தும் அதைப் பற்றி கவலை ஏதும் இல்லாமல் கிம் ஜாங் அவரது உணவு பட்டியலில் 240 பவுண்டுகள் வரை விலை மதிப்பு மிக்க ஜப்பானிய வாகியு பீப் மற்றும் போயி கிராஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்வார். சீனப் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு வகையான சூப்புக்கு கிம் ஜாங் அடிமை என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |