Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பேசிய, பெங்களூரு தெற்கு பிரிவின் துணை போலீஸ் கமிஷனர் ரோஹினி கட்டோச் செபாட், ” நோயாளி விக்டோரியா மருத்துவமனையின் மனு அழுத்தத்திற்கான சிகிச்சை வார்டில் இருந்து குதித்ததாக தெரிவித்தார். தற்கொலை செய்து கொண்ட காரணத்தை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

லிப்ட் பழுதுபார்ப்புக்காக திறக்கப்பட்ட அவசர தீ வெளியேற்ற பகுதியில் இந்த நபர் யாருக்கும் தெரியாமல் நுழைந்துள்ளார். ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது உடல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைத்துள்ளது. நோயாளிகள் இன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பய உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |