இதுவரை உள்ள வரலாற்றிலேயே தாம் தான் மிக கடினமாக உழைக்கும் அதிபர் என்றும், அந்த விருதினை வென்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் தாமே அதனை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். இங்கு தினமும் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு மடிந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமேரிக்காவில் மொத்தம் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 55,415 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,87,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் தமக்கு தாமே புகழாரம் சூட்டிக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதாவது, ” என்னை அறிந்த மற்றும் நம் நாட்டின் வரலாற்றை அறிந்தவர்கள் நான் வரலாற்றில் மிகவும் கடினமாக உழைக்கும் ஜனாதிபதி என்று கூறுகிறார்கள். அதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் ஒரு கடின உழைப்பாளி”. “வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியையும் விட முதல் 3 1/2 ஆண்டுகளில் அதிகமாக செய்திருக்கிறேன்.
போலி செய்தி நிறுவனங்கள் அதை வெறுக்கிறது” என பதிவிட்டுள்ளார். மேலும், ” போலி செய்திகள் வெளியிடும் அனைத்து நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். நாட்டில் உள்ள வழக்கறிஞர்களே! யாருக்காவது இதில் விருப்பம் உள்ளதா? சீக்கிரம் இது குறித்து செயலாற்றுங்கள்,” எனவும் பதிவிட்டுள்ளார்.