Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா” கேப்டன் கோலி என்னை காப்பார்….. கே.எல்.ராகுல் பேச்சு…!!

இனி வரக்கூடிய காலகட்டத்தில் கேப்டன்  கோலி  என்னை காப்பாற்றுவார்  என கே.எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உலகக் கோப்பையில் தான் பயன்படுத்திய கிரிக்கெட் உபகரணங்களை ஏலத்தில் விட்டார்.  அது சுமார் 8 லட்சம் மதிப்பில் விலைபோனது.

இந்நிலையில் அந்த பணத்தை தன்னார்வ  தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தானமாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் நலனுக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள்  முடங்கி இருக்கின்றனர். 

இந்த  பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் நான் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறேன். மக்களும் அவ்வாறே செலவிட்டு வந்தால் பாதுகாப்பான முறையில் கொரோனாவை விரட்டிடலாம்  என்று தெரிவித்தார். மேலும் இனி வரக்கூடிய காலம் முழுவதும் கேப்டன் கோலியுடன் தொடர்ந்து பேட் செய்ய விரும்புகிறேன். அவர் என்னைக் காப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |