Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

போலீஸ் கெடுபிடி….. இனி மெடிக்கல் ஷாப்-க்கு NO….. கோவை மக்கள் அவதி…!!

கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில்  மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், 

கோவையில் பல்வேறு பகுதியில் மருந்து கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் மருந்து பொருள்கள், மாஸ்க், சனிடைசர் உள்ளிட்டவற்றை  வாங்குவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மருந்து கடைக்காரர்கள் கூறியதாவது, முழு ஊரடங்கிற்கு முன்பே காவல்துறையினர் மருந்து கடை திறக்க வரும் உரிமையாளர்களை நிற்க வைத்து,

கேள்வி மேல் கேள்வி கேட்டு காக்க வைப்பதாகவும், அவர்கள் தாமதமாக கடைக்கு வந்து பின் அந்த நேர கட்டுப் பாட்டில் மூடி விட்டு செல்ல நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.  இப்போது முழு ஊராடங்கால் காவல்துறையினர் மருந்து கடைகளை திறக்க பாஸ் வேண்டும் என்று கேட்கின்றனர்.  இதுகுறித்து மாநகராட்சியிடம் கேட்டால் அவர்கள் கடைதிறப்பு சான்றிதழ் அல்லது ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றின் அசல் சான்றிதழை காண்பித்து விட்டு செல்லுமாறு கூறினர்.

ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராது. மீண்டும் பாஸ் வழங்க கோரி வற்புறுத்திய போதிலும், பாஸ் வழங்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர். ஆகவே மிகுந்த கெடுபிடி கொடுப்பதால் எங்களால் கடையை திறக்க முடியாது என்றும், மாநகராட்சி பாஸ் வழங்க வேண்டும், இல்லை என்றால் காவல்துறையினர் கெடுபிடி செய்யக் கூடாது. இது இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் கடையைத் திறப்போம் இல்லை எனில் திறக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |