இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது.
இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித மாடலிங் முறை மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்தியாவில் மே 21 இல் 97சதவிகிதமும், அமெரிக்காவில் மே 11இல் 97 சதவீதமும், இத்தாலியில் மே 7இல் 97 சதவிகிதமும் கொரோனா பரவல் முடிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும் உலக அளவில் டிசம்பர் 8 2020 இல் 100% கொரோனா பரவல் முடிவடைந்து இருக்கும் என்றும் அது கணித்துள்ளது.