Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் இன்று காலை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்த 10 பேரையும் அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த 5 சிறுவர்கள் உட்பட 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |