விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது.