பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands) என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்தப் பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவ பணியாளர்கள் இனி நீங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று தெரிவித்ததாக ஜேட் கூறினார்.
உங்களைப் பார்த்தால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையில்லை என்பது போல் தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்ததாக ஜேட் கூறுகிறார்.அதாவது, நீங்கள் ரொம்ப ரொம்ப மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். ஆகையால் உங்களுக்கு சிகிச்சை தேவையில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.. இதனால் அங்கேயே மன அழுத்தம் அதிகமாகி அழத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார் ஜேட் .