Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…துடிப்புடன் செயல்படுவீர்கள்…பொறுப்புகள் அதிகரிக்கும்…!

 

கடகம் ராசி அன்பர்களே …!  இன்று எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். தாயாருடன் இருந்துவந்த மனத்தாங்கல்கள் விலகிச்செல்லும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்படவே செய்து முடிப்பீர்கள். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.

காதல் வயப்பட்ட கூடிய சூழலும் உண்டு.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |