அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு , விவசாயக்கடன் மற்றும் கல்வி கடன் ரத்து 7 பேர் விடுதலை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சில அம்சங்களை பார்ப்போம் :
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் 1 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
எம்ஜிஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் .
நீர் மேலாண்மை திட்டம் காவேரி கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து .
விவசாயிகள் கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றம் நடவடிக்கை
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் .
எஸ்சி / எஸ்டி மக்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு புதிய சட்டம் கொண்டுவரப்படும் .
இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.
ஈழத் தமிழருக்கு நீதி வழங்க போர்க்குற்ற விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் .
7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும் .
அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்