மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். எனவே மாவட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு இருக்க வாய்ப்புண்டு என தெரிகிறது. ஊரடங்கிலிருந்து எப்படி வெளியேறுவது ? எந்த பகுதிக்கு விலக்கு அளிப்பது ? எங்கே நீட்டிப்பது என மாநில வாரியாக அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கின்றது. மாநில முதலமைச்சர்கள் இந்த அறிக்கையை பார்த்துக்கொண்டிருகிறார்கள். ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக ஊரடங்கு இருந்து விலக்கு அளிப்பதற்கு பதிலாக, பாதிப்பு இல்லாத அல்லது பாதிப்பு குறைந்த பகுதிகளுக்கு முதலில் தளர்வு அளிக்க வாய்ப்பு. இவை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை பகுதிகளாக அறியப்படுகிறது. சிவப்பு ஆரஞ்சு பச்சை பகுதிகளுக்கு அர்த்தம் என்று பார்த்தால் எங்கே அதிகம் உள்ளதோ அதை சிவப்பு பகுதிகள் என்கின்றனர். எங்கே பாதிப்பு குறைவாக இருக்கிறதோ அதை ஆரஞ்சு பகுதி என்றும், எங்கே பாதிப்பு இல்லையோ அங்கே அது பச்சைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பகுதியில் 14 நாட்களுக்கு ஒரு புதிய பாதிப்பு கூட ஏற்படவில்லை எனில் அது ஆரஞ்சு பகுதியாக மாறுகின்றது. அதேபோல ஆரஞ்சு பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் எந்த ஒரு புதிய பாதிப்பும் இல்லை எனில் அது பச்சைப் பகுதியாக மாறுகின்றது.
சிவப்பு பகுதியில் 28 நாட்களுக்கு ஒரு புதிய பாதிப்பு கூட ஏற்பட வில்லை எனில், அது பச்சை பகுதியாக அறிவிக்கப்படும். சிவப்பை பொறுத்தவரை இந்த பகுதியில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் சொல்ல்லப்படுகின்றது. இருந்தும் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும். பச்சை பகுதியில் தளர்வு இருக்க வாய்ப்புள்ளது.எனினும் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும். சிவப்பு பகுதிகளை ஆரஞ்சு பகுதியாக மாற்ற, ஆரஞ்சு பகுதியை பச்சை பகுதியாக மாற்ற சில கட்டுப்பாடுகளை அரசு கடைபிடிக்கலாம்.
பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் சில துறைகளில் வேலைகள் இயங்கபட அனுமதிக்க வாய்ப்பு என தெரிகிறது. பொதுப் போக்குவரத்து இயக்க தடை மேலும் நீட்டிக்கப்படலாம். கார்கள் இயங்க சில கட்டுப்பாடுகளோடு அனுமதி தரப்படலாம். பள்ளி, கல்லூரிகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்படலாம். அடுத்த சில நாட்களுக்கு முக கவசம் அணிவது வாழ்வின் அங்கமாக இருக்கும் தனிநபர்களின் கட்டாயமாக்கப்படும்.